Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டிலும் வீதியில் தவிக்கிறோம்: இரணைதீவு மக்கள்

In இலங்கை
Updated: 11:46 GMT, Jan 1, 2018 | Published: 10:39 GMT, Jan 1, 2018 |
0 Comments
1149
This post was written by : Risha
IMG_6282

பரம்பரையாக வாழ்ந்து தொழில் செய்த நிலத்தை தரமறுத்து புத்தாண்டிலும் வீதியிலிருந்து போராடும் நிலைக்கு இந்த அரசாங்கம் எம்மை தள்ளியுள்ளது என பூநகரி இரணைதீவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தம்மை மீள்குடியேற அனுமதிக்கக் கோரி இரணைதீவு மக்கள் எட்டு மாதங்கள் கடந்து இன்றும் (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் பூர்வீக கடற்தொழில் நிலமான இரணைதீவுப்பிரதேசத்தில் நூற்றாண்டு காலம் மக்கள் தொன்மையாக வாழ்ந்த இடத்திலிருந்து கடந்த யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டபோதும், இன்றுவரை அவர்களை அந்த நிலத்தில் சென்று வாழ்வதற்கான உரிமை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது இந்த மக்கள் தங்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தப்பட்டபோதும், பல்வேறு காரணங்களைக்காட்டி மக்கள் மீள்குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கோரிக்;கை விடுத்து வந்த மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதி உலகத்தொழிலாளர் தினத்தில் தமக்கான தொழில் செய்யும் உரிமையையும் தமது நிலத்தில் வாழ்வதற்குமான உரிமையைக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்தனர். குறித்த மக்களின் போராட்டம் எட்டு மாதங்களாக இன்றும் தொடர்கின்றது.

கடந்த டிசம்பர் 25ம்திகதி கிஸ்த்துவின் பிறப்பையும் புத்தாண்டையும் எங்கள் பூர்வீக நிலமான இரணைதீவில் சென்று கொண்டாடுவதற்கு வழிவகை செய்யவேண்டுமென கோரியிருந்தனர்.

ஆனால், இன்று வரை அவர்களது நிலங்கள் விடுவிக்கப்படாது கிறிஸ்தவ மக்களாகிய இவர்கள் புத்தாண்டு தினத்திலும் வீதியில் போராடி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg