Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிகுந்த நம்பிக்கையுடன் 2018ஆம் ஆண்டு வரவேற்பு

In உலகம்
Published: 10:41 GMT, Jan 1, 2018 |
0 Comments
1048
This post was written by : Suganthini
newyear

2018ஆம் ஆண்டை மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் உலக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், தத்தமது மத வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து உலக நாடுகளில் 2018ஆம் ஆண்டை மக்கள் வரவேற்றுள்ளனர்.

லண்டன்: லண்டன் மக்கள் பிறந்துள்ள புத்தாண்டை மிகுந்த மனவலிமையுடன் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக, எடின்பரோ நகரில் புத்தாண்டுப் பிறப்பையிட்டு வானவேடிக்கைகளும், பல்வேறு கொண்டாட்டங்களும் இடம்பெற்றன.

பிரான்ஸ்:  பிரான்ஸ் மக்களும் பிறந்துள்ள புதுவருடத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்கா:  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்; தனது குடும்பத்தினருடன் புதுவருடத்தை வரவேற்றுள்ளார். அத்துடன், நியூயோர்க் நகரத்திலும் மணியை ஒலிக்கச்செய்து மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

பெல்ஜியம்:  பெல்ஜிய மக்களும் பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் பிறந்துள்ள புதுவருடத்தை வரவேற்றுள்ளனர்.

கிறீஸ்: கிறீஸ் மக்களும் புத்தாண்டை மன மகிழ்வோடு வரவேற்றுள்ளனர்.

ரஷ்யா:  ரஷ்ய மக்களும் 2018ஆம் ஆண்டை புன்முறுவலுடன் வரவேற்றுள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலும் கண்கவர் வானவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

டுபாய்:  டுபாயிலும் மக்கள் வானவேடிக்கைகளுடன் 2018ஆம் ஆண்டு புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர்

ஜப்பான்:  ஜப்பானிலும் புதுவருடம் மிகவும் சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா: அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் ஒன்றுகூடிய மக்களும் புதுவருடத்தை மிகச் சிறப்பாக வரவேற்றுள்ளனர்.

சீனா:   சீன மக்களும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்களில் இவ்வாறு ஈடுபட்டனர்.

தாய்லாந்து:  தாய்லாந்து மக்களும் மன மகிழ்வோடு புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

ஹொங்கொங்:  ஹொங்கொங் மக்களும் மிகச் சிறப்பாக புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg