Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறையில் வேட்பாளர்களுக்கு தெளிவு வழங்கும் கலந்துரையாடல்!

In
Updated: 10:55 GMT, Jan 1, 2018 | Published: 10:55 GMT, Jan 1, 2018 |
0 Comments
1152
This post was written by : Ravivarman

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெளிவு வழங்கும் கலந்துரையாடலும் அவர்களுடனான ஆலோசனைக் கூட்டமும் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை மொண்டி விடுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஊடாக வேட்பாளராக களமிறங்கியுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அத்துடன், இத்தேர்தலில் இவ்விரு கட்சிகள் சார்பாக மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்கள்.

மேலும் இக்கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரீ. ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதியமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

26167501_2006079443003830_5954403194811328358_n 26113863_1950699815192392_1069912493118554427_n 26047186_2006080446337063_793102644957606281_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg