Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டது புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி

In இலங்கை
Updated: 10:57 GMT, Jan 1, 2018 | Published: 10:57 GMT, Jan 1, 2018 |
0 Comments
1584
This post was written by : Varshini

யுத்தம் நிறைவடைந்த பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி, எட்டு வருடங்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

ராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படும் கேப்பாப்புலவின் சில காணிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் மக்கள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கேப்பாப்புலவில் இன்னும் 177 ஏக்கர் காணிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன. இவற்றை கையளிக்குமாறு மாதக்கணக்கில் அம்மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த புதுவருடத்திலாவது தமது காணிகளை முழுமையாக கையளித்து சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ வழியேற்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் மார்க்கமான இந்த வீதி மூடப்பட்டிருந்தால், கடந்த காலங்களில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். குறித்த ஆலயத்திற்கு வைகாசி பொங்கலின் போது மக்கள் பாத யாத்திரை செல்லும் நிலையில், கடந்த காலங்களில் இவ்வீதி மூடப்பட்டிருந்ததால் கற்களும் முட்களும் நிறைந்த காட்டுப்பகுதியிலேயே பக்தர்கள் தமது யாத்திரையை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg