Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி மூலம் சந்திரசேகரனின் கனவு நனவாகும்: இராதாகிருஸ்ணன்

In இலங்கை
Published: 11:11 GMT, Jan 1, 2018 |
0 Comments
1146
This post was written by : Ravivarman

உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி மூலம் சந்திரசேகரனின் கனவு நனவாகும் என என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 8ஆவது சிரார்த்த தினம், இன்று (திங்கட்கிழமை) தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், ”நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி சார்பாக 39 வேட்பாளர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெற்றியீட்டுவதன் ஊடாக அமரர்.சந்திரசேகரனின் கனவு நனவாகும். 30, 40 வருட காலமாக மலையகத்தில் சேவை செய்தவர்கள் செய்யாத விடயம் ஒன்றை தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக குறுகிய காலத்தில் செய்துள்ளோம்.

அதாவது புதிய பிரதேச சபைகளை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச சபைகள் அனைத்திலும் மலையக மக்கள் முன்னணியைச் சார்ந்த வேட்பாளர்கள் வெற்றியீட்ட வேண்டும். தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் ஊடாக நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கு 100 வேட்பாளர்களை ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் இணைத்துள்ளோம்.

இதில் 39 பேர் மலையக மக்கள் முன்னணியைச் சார்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் வெற்றியீட்டும் பட்சத்தில் அமரர். சந்திரசேகரனின் கனவு அவரின் கொள்கை நனவாகும்” என அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

IMG_0316

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg