Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவராம் கொலையுடன் புளொட்டை தொடர்புபடுத்த முயற்சி! – சித்தார்த்தன்

In இலங்கை
Updated: 11:22 GMT, Jan 1, 2018 | Published: 11:22 GMT, Jan 1, 2018 |
0 Comments
1202
This post was written by : Varshini

ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் புளொட் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனினும், எமது அமைப்புடன் சிவராம் கொலையை தொடர்புபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிவராம் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமது அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டுள்ளதாக  சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நீதிமன்ற அறிவிப்பின் பின்னரும் சிவராம் கொலையுடன் சிலர் புளொட் அமைப்பை தொடர்புபடுத்த முயற்சிப்பதானது, தமது அமைப்பின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளதென சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg