Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய ஆண்டில் உலகத்துக்கு ஐ.நா. சிவப்பு எச்சரிக்கை

In உலகம்
Updated: 11:24 GMT, Jan 1, 2018 | Published: 11:24 GMT, Jan 1, 2018 |
0 Comments
1356
This post was written by : Suganthini

2018ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், உலக மக்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரெஸ் விடுத்துள்ளார்.

புத்தாண்டையிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள செய்தியிலேயே, அவர் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றமும் அணுவாயுத நடவடிக்கையும் பாரிய அச்சுறுத்தலுகாகக் காணப்படுகின்றன. இந்த அபாயங்களையிட்டு சிவப்பு எச்சரிக்கையை நான் விடுக்கின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மோதல்கள் ஆழமடைந்துள்ளன. புதிய ஆபத்துகள் தென்பட்டுள்ளன. அணுவாயுதங்களைப் பற்றி உலகளாவிய மக்களின் மத்தியில் கவலை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதேவேளை, காலநிலை மாற்றமும் மிக வேகமாக இடம்பெறுகின்றது.

உலகளாவிய ரீதியில் காணப்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க 2018ஆம் ஆண்டு ஒற்றுமையுள்ள ஆண்டாக மிளிர வேண்டும். எனவே, புதிய ஆண்டில் சமாதானமான முறையில் சிறந்த தீர்மானங்களை எடுக்க உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg