Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் நடிகை கௌதமி!

In சினிமா
Updated: 11:26 GMT, Jan 1, 2018 | Published: 11:23 GMT, Jan 1, 2018 |
0 Comments
1241
This post was written by : Surenth

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும் அவர் மூலம் தமிழகத்தில் ஆன்மீக அரசியல் உருவாகப்போகிறது எனவும் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், கௌதமியும் தன்னுடைய வாழ்த்தையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்ல எண்ணத்துடன் பொதுமக்கள் எல்லோரும் பயனடையக்கூடிய வகையில் செயல்படக்கூடிய ஒரு தலைவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது நல்ல விடயம் தான். கட்சி ஒன்றை ஆரம்பிக்கின்றார் என்பது நல்ல விடயம் தான் பொதுமக்களாகிய நமக்கு இது தான் வேண்டும்.

ஆன்மிக அரசியல் என்பது அவருடைய விருப்பம். ஆனால் சில உண்மைகள் இருக்கின்றன. இது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. 50 வருடத்திற்கு மேலாக திராவிடக் கழகங்கள் தான் தமிழகத்தை ஆட்சி செய்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்தது’ எனவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg