Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் உரிமைகளில் அக்கறை கொண்ட ஒரே கட்சி கூட்டமைப்பு: சிறிநேசன்

In இலங்கை
Published: 11:51 GMT, Jan 1, 2018 |
0 Comments
1097
icon_com
This post was written by : Risha
DSC07617

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் நலன்களிலும், உரிமைகளிலும் எப்போதும் அக்கறைக்கொண்ட கட்சியாக செயற்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் கூட்டமைப்பின் சார்பில் இருதயபுரம் வட்டாரத்தில் போட்டியிடும் வி.பாலராஜாவின் பிரசார அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மட்டக்களப்பு மாநகர சபையில் போட்டியிட கூட்டமைப்பில் அதிகளவான இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஊழல், மோசடிகள், லஞ்சம் இல்லாத கட்சியென்பதை மக்கள் அறிந்துள்ளனர். அவ்வாறு யாரும் செயற்படுவார்களானால் அவர்களை மக்கள் கைகழுவிவிடும் போக்கினையும் நாங்கள் பார்த்துள்ளோம்.

கூட்டமைப்பில் இருந்து தூய்மையான அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு காணப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று சிலர் கேட்கின்றனர். நாங்கள் யாரையும் கடத்தவும் இல்லை, கப்பம் பெறவும் இல்லை, இளைஞர்கள் சிறையில் அடைபடுவதற்கு சூத்திரதாரியாக இருக்கவும் இல்லை. இவற்றினை மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே போராடிவருகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையுடன் பயனிக்கின்றது. அது யாருக்கும் சோரம் போகாத கட்சியாகவே இருந்து வருகின்றது. அவ்வாறு சோரம்போன பலர் தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

DSC07575 DSC07578

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg