Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹற்றனில் சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் மீட்பு!

In இலங்கை
Published: 11:58 GMT, Jan 1, 2018 |
0 Comments
1187
This post was written by : Ravivarman

ஹற்றன், வெலிஓயா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சட்டவிரோத மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு இன்று (திங்கட்கிழமை) கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் 45 சாராய போத்தல்கள், 48 பியர் ரின்கள், சாராயத்தினை ஊற்றிக் கொடுப்பதற்காக வைத்திருந்த 26 சிறிய போத்தல்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

புத்தாண்டு தினத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த போதே சாராய போத்தல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் தினங்களில் ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg