Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் நெருக்கடி: உயிரிழந்தோர் 12ஆக அதிகரிப்பு

In உலகம்
Updated: 12:28 GMT, Jan 1, 2018 | Published: 12:27 GMT, Jan 1, 2018 |
0 Comments
1110
icon_com
This post was written by : Suganthini
Iran

ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சியைக் கண்டித்தும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்தும், அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையிலும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்ட வேளையில் இடம்பெற்ற கலவரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து   நிலவும்  வன்முறை காரணமாக   இதுவரையில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஈரானில் காணப்படும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையை சீர்செய்வதாக, அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg