Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவை முட்டாளாக்கிய பாகிஸ்தான்: டொனல்ட் ட்ரம்ப்

In
Updated: 04:14 GMT, Jan 2, 2018 | Published: 14:02 GMT, Jan 1, 2018 |
0 Comments
1465
This post was written by : Surenth

பாகிஸ்தானுக்கு, அமெரிக்க தலைவர்களை பார்த்தால் முட்டாள்கள் போலத் தெரிகின்றதா? என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்ரம்ப் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு ஒன்றில் பாகிஸ்தான் தொடர்பில் தனது நிலைப்பாட்டை இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ முட்டாள்தனமாக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டொலர்கள் வரை கடந்த 15 ஆண்டுகளாக உதவி செய்துள்ளது. இதற்கு கைமாறாக பாகிஸ்தான் பொய், வஞ்சகத்தைத் தான் திருப்பித் தந்துள்ளது.

பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதிகளுக்கு சொர்க்க பூமியாக இருந்து வருகின்றது. நாங்கள் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தொடர்பில் தேடுதல் நடத்திய போது, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எங்கள் நாட்டில் உள்ள தலைவர்களைப் பார்த்தால் முட்டாள்கள் போலத் தெரிகிறதா, இனிவரும் காலத்தில் ” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg