Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நானும் அரசியலுக்கு வரத் தயார்: பிரகாஷ்ராஜ்

In இந்தியா
Published: 03:34 GMT, Jan 2, 2018 |
0 Comments
1188
This post was written by : Kemasiya
gfhgff

நானும் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கிறேன் என நடிகர் பிகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களுரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

“எனக்கு அரசியலுக்கு வரும் என்னம் இதுவரை இல்லை. ஆனால் தொடர்ந்தும் என்னிடம் சவால் விடுத்துக் கொண்டிருந்தால் நானும் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கிறேன்.

எனக்கு பணம், புகழ், வெற்றி கிடைத்துள்ளது. இதன் போதுள்ள அமைதியான வாழ்க்கையை விட்டு ஏன் நான் அரசியல் பேச முன்வருகிறேன் என்றால், சமுதாயத்தில் உள்ள மக்கள் அரசியல் சமூக சூழ்நிலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.” என அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில காலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க.விற்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அவர் நடிப்புத்துறையில் இருந்து கொண்டு எதுவும் பேசலாம். அரசியலுக்கு வந்தால் தான் ஆழமும், நீளமும் தெரியும் என அண்மையில் பா.ஜ.க.வினர் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதில் வழங்கும் முகமாகவே நேற்று நடிகர் பிரகாஷ்ராஜ் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg