Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது: கடம்பூர் ராஜூ

In இந்தியா
Updated: 04:47 GMT, Jan 2, 2018 | Published: 04:47 GMT, Jan 2, 2018 |
0 Comments
1159
This post was written by : Vithushagan

தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை  என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அரசு அரசி மருத்துவமனையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு உரையாற்றும்   போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்து  கருத்து தெரிவித்த அவர், ”தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சி 2 அல்லது 3 மாதங்களில் கலைந்து விடும் என்று கூறி வருகின்றனர். வழக்கமாக எதிர் கட்சியினர் கூறுவதையே இவர்களும் கூறி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வருகிற 2021ஆம் ஆண்டுக்கு பின்னரும் சிறப்பாக தொடரும்.

சிஸ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்வதற்குகூட தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கிறார்கள். இதுவரை ஆழம் பார்க்க நினைத்த திரைப்படத்துறையினர் புரட்சித் தலைவரை நினைத்து புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை தான் தமிழகத்தில் ஏற்படும்.

தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திராவிட கட்சிகள் தான் எப்போதும் ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg