Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்க தொடர் சவாலாக அமையும்: ரோஹித்

In கிாிக்கட்
Updated: 05:00 GMT, Jan 2, 2018 | Published: 04:59 GMT, Jan 2, 2018 |
0 Comments
1130
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்க அணியுடனான தொடர் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெறவுள்ளது. இத் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தென் ஆபிரிக்காவின் பந்து வீச்சு மிகவும் அபாயகரமானதாக இருக்கும். அவர்களின் பந்து வீச்சு உலகின் தலை சிறந்தது. அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தமது சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆனால் தென் ஆபிரிக்காவின் பந்து வீச்சு முற்றிலும் மாறுபட்டதாக அமையும். ஒரு நிலையான தாக்குதலாக அவர்களுடைய பந்து வீச்சு இருக்காது. அனுபவ பந்து வீச்சாளர்களும் மாறுபட்ட திறனுடைய பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர். எனவே போட்டி சவாலானதாகவே அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg