Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மு.கா. தலைவர் ஹக்கீம் மீது றிசாட் குற்றச்சாட்டு

In
Updated: 05:11 GMT, Jan 2, 2018 | Published: 04:52 GMT, Jan 2, 2018 |
0 Comments
1169
This post was written by : Varothayan
Rishad - Ampara - 03

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் யானைச் சின்னத்துக்கு வழங்கும் வாக்குகள் அனைத்தும், ரவூப் ஹக்கீம் எனும் மொத்த வியாபாரியின் சட்டைப் பைக்குள் இருக்கும் வாக்குகளாக எண்ணப்படும் என்றும், அந்த வாக்குகளுக்குரிய பெறுமதியை தன்னந்தனியாக அவர் பெற்றெடுத்துக் கொள்வார் எனவும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை), அம்பாறையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்து விலகி, அப்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்போமா என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் – தான் கேட்டதாகவும், அதனை மஹிந்த ராஜபக்ஷவிடம் ஹக்கீம் சொல்லி விட்டார் என்றும், இதன்போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலின் பிறகு, முஸ்லிம் சமூக நலனுக்காக அரசியலில் இணைந்து செயற்படுவோமா என்று, ஹக்கீமிடம் ஒரு சந்தர்ப்பத்தில் கேட்ட போது, அதற்கு அவர் முடியாது என்று மறுத்து விட்டார் எனவும் றிசாத் பதியுதீன் கூறினார்.

Rishad - Ampara - 01 Rishad - Ampara - 02

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg