Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபியாவிலிருந்த குடியேற்றவாசிகள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு

In
Published: 05:36 GMT, Jan 2, 2018 |
0 Comments
1160
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் செல்ல முற்படுகையில், லிபியாவில் தடுத்துவைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருதொகுதியினர், அவர்களின் சொந்த இடங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களே, லிபியாவின் மிஸ்ரடா விமான நிலையமூடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரிச்செல்ல முற்படும் பலர், லிபியாவூடாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சென்றடைவதற்காக மத்தியதரைக் கடல் வழியாகப் பயணிக்கின்றனர். இப்புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர், லிபியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களால்  முகாம்கள் நிரம்பி வழிவதால், இவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் ஐ.நா.வும் முன்னெடுத்துள்ளது.

இதனொரு கட்டமாக, கடந்த 2017ஆம் ஆண்டு டிசெம்பரில் சுமார் 15 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg