Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறும்: விஜயபாஸ்கர்

In இந்தியா
Updated: 05:42 GMT, Jan 2, 2018 | Published: 05:42 GMT, Jan 2, 2018 |
0 Comments
1162
This post was written by : Vithushagan

முதல்வர் பழனிசாமியின் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று சுகாரதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்தாண்டு போல் ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் வராது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையின் படி இந்தாண்டு தமிழகத்தில் தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில், புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 450 காளைகளும் அதை அடக்க 100 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் காத்திருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg