Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் உருவப்படம் தாங்கிய பதாதைகள் அகற்றப்பட்டன!

In
Published: 06:04 GMT, Jan 2, 2018 |
0 Comments
1108
This post was written by : Varshini
image160161819

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாதைகளை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

அநுராதபுரம் – மதவாச்சிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் காணப்பட்ட பதாதைகளே அகற்றப்பட்டுள்ளன.

கட்சியில் அங்கத்துவம் பெறாத ஒருவரின் படத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானதென தெரிவித்தே மஹிந்தவின் பதாதைகள் அகற்றப்பட்டுள்ளன.

எனினும், நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்த ஒருவரின் படத்தை பயன்படுத்துவது தவறில்லையென தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்ட தலைவர் எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்த விரும்பினால் அவரது உருவப்படத்தை பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லையென குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இச்சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மதவாச்சி ஒருங்கிணைப்பாளர் கே.எச்.நந்தசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை பார்த்து அரசாங்கம் பீதியடைந்துள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg