Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது! (2ஆம் இணைப்பு)

In
Published: 06:22 GMT, Jan 2, 2018 |
0 Comments
1121
icon_com
This post was written by : Vithushagan
5

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டமூலத்தை நீக்க வேண்டும் என்ற வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீளப்பெறப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் இன்று கூடிய  மக்களவையில் தெரிவித்ததையடுத்து குறித்த போராட்டம் மீளப்பெறப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்: நோயாளிகள் பாதிப்பு!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டமூலத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுதும் வைத்தியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவக் கல்வியை முறைப்படுத்தும் அமைப்பாக இந்திய மருத்துவ நிறுவனம் விளங்கி வருகிறது. இந்நிலையில் இதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வருவதற்கான சட்டமூலத்தை மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அறிமுகம் செய்து வைத்தார்.

மருத்துவக் கல்வி சேர்க்கையில் நடைபெறும் முறைகேட்டை, ஊழலையும் தடுக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதற்கு இந்திய மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்காக நாடு முழுதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg