வடகொரியாவின் தீர்மானத்திற்கு தென் கொரிய வரவேற்பு
தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு வட கொரியா தனது வீரர்களை அனுப்புவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு தென்கொரியாவரவேற்றுள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜங் உன் எடுத்துள்ள தீர்மானமானது கொரிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் எனவும் தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தென் கொரிய ஜனாதிபதியின் பேச்சாளர் பார்க் சு-ஹியூன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்’ தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன்னின் புதுவருட பேச்சினை வரவேற்கிறது. கிம், தென் கொரியாவிற்கு குளிகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு வீரர்களை அனுப்புவதற்கு எடுத்துள்ள தீர்மானம் சிறந்த விடயமாகும்.
இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுக்களை ஏற்படுத்த முடியும். தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம், வட கொரியாவுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு எந்த நேரமும் தயாராக இருக்கின்றது.
இதன் ஊடாக கொரிய தீவகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும் என கருதுகின்றோம். தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதட்டம் எதிர்வரும் காலங்களில் குறையும் என நாம் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.