Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்கு எதிர்ப்பு! – கஃபே

In இலங்கை
Updated: 06:57 GMT, Jan 2, 2018 | Published: 06:50 GMT, Jan 2, 2018 |
0 Comments
1103
This post was written by : Varshini
KeerthiTennakoon_670px_14_03_17

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு அவர்களது சொந்தக் கட்சியிலேயே பாரபட்சம் காட்டப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே குறிப்பிட்டுள்ளது.

ஆண் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் யாவும் பெண் வேட்பாளர்களுக்கு கிடைப்பதில்லையென அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒவ்வொரு சபையிலும் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் காணப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சக பெண் வேட்பாளர்கள் சமமாக நடத்தப்படுவதை கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டுமென கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறில்லாவிட்டால் அது கட்சிகளுக்கே பாதிப்பை ஏற்படுத்துமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விருப்புவாக்கு முறையிலிருந்து சில ஆண் வேட்பாளர்கள் இன்னும் வெளிவராமல் இருப்பதே இதற்கு காரணமென குறிப்பிட்டுள்ள கீர்த்தி தென்னகோன், இச்செயற்பாடு தொடருமாயின் அதற்கெதிராக கேள்வியெழுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெண் பிரதிநிதித்துவம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை, தேர்தல்கள் செயலகம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg