Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனுக்கு ஆதரவாக செயற்பட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் அதிரடியாக தகுதி நீக்கம்!

In இந்தியா
Published: 07:12 GMT, Jan 2, 2018 |
0 Comments
1175
This post was written by : Kemasiya
cbgdcbg

அ.தி.மு.க. உறுப்பினர்கள் 9 பேர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து, இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த 9 உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தின் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.கோதண்டபாணி, வேலூர் மாவட்ட மகளீர் அணிப் பொறுப்பாளர் சி.ஜெயந்தி பத்மநாதன், கடலூர் கிழக்கின் நகர செயலாளர் வி.டி.கலைச்செல்வன், தேனி மாவட்ட மருத்துவ அணித்தலைவர் கே.கதிர்காமு, விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.ஜ.சுப்ரமணியம், சிவகங்கை மாவட்டத்தின் மாணவர் அணித் தலைவர் எஸ்.மாரியப்பன், ராமநாதபுரத்தின் மருத்துவ அணிச் செயலாளர் எஸ்.முத்தையா, தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ், தூத்துக்குடி விளாத்திக்குளத்தின் கழகச் செயலாளர் கு.உமாமகேஸ்வரி ஆகியோரே இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயற்பட்டு, அ.தி.மு.க. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக முதலமைச்சர் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக குறித்த 9 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg