Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறம் – 2 திரைப்படத்தில் நயன்தாரா இல்லை!

In சினிமா
Updated: 06:49 GMT, Jan 2, 2018 | Published: 06:49 GMT, Jan 2, 2018 |
0 Comments
1157
This post was written by : Surenth

அறம் – 2 திரைப்படத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாக இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் நடிப்பில் உருவாகி அறம் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நயன்தாரா வேறு சில திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதால் அறம் 2 திரைப்படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சித்தார்த்தை வைத்து படமாக்க இயக்குநர் தீர்மானித்துள்ளதாகவும் படப்பிடிப்புக்கள் ஏப்ரல் மாதம் அளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில், அறம் திரைப்படத்தில் ஆளுநராக நடித்த நயன்தாரா அதிரடியாக சில நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றும் அறம் – 2 திரைப்படத்தில் அரசியல் பிரச்சினைகள் குறித்து காண்பிக்கப்படும் எனவும் இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg