Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் இரண்டாவது நாளாகவும் இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

In இலங்கை
Published: 06:56 GMT, Jan 2, 2018 |
0 Comments
1109
This post was written by : Varothayan

வடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் மாவட்ட ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச்சங்கம் வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கத்துடன் இணைந்து விசேட போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் போக்குவரத்து சேவைகள் முழுமையாக மன்னார் மாவட்டத்தில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையத்தில் அரச, தனியார் போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ளுமாறு வடக்கு முதலமைச்சர் பணித்திருந்தார்.

முதலமைச்சரின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாண ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 5 8

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg