Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்து வீச்சு பயிற்சியாளராகிறார் ஆஷிஸ் நெஹரா

In கிாிக்கட்
Updated: 07:31 GMT, Jan 2, 2018 | Published: 07:22 GMT, Jan 2, 2018 |
0 Comments
1328
This post was written by : Elakkiya

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை துடுப்பாட்ட பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கேரி கிர்ஸ்டென் நியமிக்கப்பட்டுள்ளார்.

18 வருட கிரிக்கட் வாழ்க்கையிலிருந்து கடந்த நவம்பர் மாதமே ஓய்வு பெற்றுக் கொண்ட நெஹராவுக்கு இரண்டு மாதங்களில் பயிற்சியாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணி சார்பாக 132 ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடிய நெஹரா 162 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரிலும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டானியல் வெட்டோரியே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எஸ் தொடரில் ஆரம்பம் முதலே உள்ள மூன்று அணிகளில் ரோயல் சலஞ்சர்ஸ அணியும் ஒன்று எனினும் இதுவரை சம்பியன் கிண்ணத்தை வென்றதில்லை.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மீள கட்டியெழுப்புவதே புதிய பயிற்சியாளர்கள் குழுவின் முதல் கடமையாக உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg