Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுடன் தென்கொரியா உயர்மட்டக் கலந்துரையாடல்!

In உலகம்
Updated: 07:06 GMT, Jan 2, 2018 | Published: 07:06 GMT, Jan 2, 2018 |
0 Comments
1174
This post was written by : Suganthini

தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொள்ளும் நோக்கில், எதிர்வரும்  9ஆம் திகதி வடகொரியாவுடன் தென்கொரியா உயர்மட்டக் கலந்துரையாடல் நடத்த இணங்கியுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் அழைப்பை ஏற்று, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா இணங்கியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரியர்களின் வரலாற்று ரீதியான பேச்சுவார்த்தைக்குரிய இடமான பன்முன்ஜொம் (Panmunjom) பகுதியில் கலந்துரையாடல் நடைபெறுமென, தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவைச் சேர்ந்த குழுவினர் கலந்துகொள்வது தொடர்பாக விரிவாக் கலந்துரையாடப்படுமென்பதுடன், கொரியர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்த தாம் எண்ணியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், வடகொரியாவிலிருந்து குழுவொன்றை அனுப்பவுள்ளமை தொடர்பாகக் கவனம் செலுத்தி வருவதாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நேற்று தெரிவித்திருந்ததுடன், இது தொடர்பாக உடனடிச் சந்திப்பு நடத்தவும், அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

வடகொரிய ஜனாதிபதியின் இந்த அழைப்பைத் தொடர்ந்து, தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கிடையில் நிலவும் பதற்ற நிலைமையைச் சீர்செய்ய இதுவொரு நல்ல தருணமென்று, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரியா ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திறன்களை வளர்த்துவரும் நிலையில், தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கிடையில் குழப்ப நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg