Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் தொடரில் குப்தில் பங்கேற்கிறார்!

In கிாிக்கட்
Updated: 07:44 GMT, Jan 2, 2018 | Published: 07:42 GMT, Jan 2, 2018 |
0 Comments
1182
This post was written by : Elakkiya

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலிரு ஒருநாள் போட்டிகளுக்குமான நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் குப்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதேவேளை மிச்சேல் சான்ட்னர் மற்றும் ரொட் ஆஸ்டில் ஆகியோரும் அணியில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் காயம் காரணமாக பங்கேற்காத குப்தில், தற்போது உடற்தகுதி பெற்று  ரி-ருவென்ரி தொடரில் பங்கேற்றுள்ளார்.

அதேவேளை கொலின் டி கிரான்ட்ஹோம் பாகிஸ்தான் அணியுடனான முதலிரு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகின்றது. எனினும் இறுதி மூன்று ஒருநாள் போட்டிகளில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடர் ஆகியன நடைபெறவுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி வெலிங்டனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg