Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து முர்ரே விலகல்

In டெனிஸ்
Published: 08:14 GMT, Jan 2, 2018 |
0 Comments
1107
This post was written by : Elakkiya

இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். 30 வயதாக முர்ரே கடந்த ஜூலை மாதம் முதல் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காத நிலையில் உலகத்தரவரிசையில் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் கடந்த வியாழக்கிழமை பங்கேற்ற முர்ரே போட்டி நிலைமைகளுக்கான உடற்தகுதியை தான் பெறவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

எனினும் ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முர்ரே பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg