Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க விமான நிலையங்களில் கணினிகள் செயலிழப்பு: பயணிகள் காத்திருப்பு

In
Updated: 08:25 GMT, Jan 2, 2018 | Published: 08:25 GMT, Jan 2, 2018 |
0 Comments
1179
This post was written by : Suganthini

அமெரிக்காவிலுள்ள பல்வேறு விமான நிலையங்களில் கணினிகள் செயலிழந்தமையால், குடிவரவுத்துறை கட்டுப்பாட்டறைக்கு முன்பாக பயணிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்டதாக, சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வொஷிங்டனிலுள்ள சியாட்டில் டகோமா (Seattle-Tacoma) சர்வதேச விமான நிலையம், டென்வர் (Denver) சர்வதேச விமான நிலையம், நியூயோர்க்கிலுள்ள ஜோன் எப்.கெனடி சர்வதேச விமான நிலையம், ஹார்ட்ஸ்பீல்ட் ஜக்ஸன் அட்லான்டா (Hartsfield-Jackson Atlanta ) சர்வதேச விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களிலுள்ள குடிவரவுத்துறை கட்டுப்பாட்டறைகளில் காணப்படும் கணினிகள் திடீரென்று நேற்று (திங்கட்கிழமை) மாலை செயலிழந்துள்ளன.

சுமார் 2 மணித்தியாலங்களாக கணினிகள் செயலிழந்து காணப்பட்டதாகவும், இதன் காரணமாக குடிவரவுத்துறை கட்டுப்பாட்டறைகளுக்கு முன்பாக பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் பின்னர், நிலைமை சரி செய்யப்பட்டு வழமைக்கு வந்துள்ளதாகவும், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg