Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தலாக் தடைச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றின் மேல்சபையில் தாக்கல்!

In இந்தியா
Updated: 09:11 GMT, Jan 2, 2018 | Published: 09:11 GMT, Jan 2, 2018 |
0 Comments
1101
This post was written by : Kemasiya
vxcb

முஸ்லிம் சட்டத்தில் இருந்து முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் சட்டமூலம், நாளை நாடாளுமன்றின் மேல்சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனந்தகுமார் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த சட்டமூலம் நாளை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஆண்கள் எழுத்து மூலமோ, வார்த்தை மூலமோ மூன்று முறை தலாக் கூறிவிட்டு விவாகரத்து பெறும் நடைமுறை முஸ்லிம் சட்டத்தில் இருந்துவந்த நிலையில், குறித்த நடைமுறை முஸ்லிம் பெண்களை அதிகம் பாதிப்பதாகவும். இது ஒரு குற்றச்செயல் என்றும் கூறி, புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற மக்களவையில் கடந்த (டிசெம்பர்) 28 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்புக்கள் பல எழுந்துள்ள நிலையிலும், நாளை நாடாளுமன்றின் மேல்சபையில் இந்தச் சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg