Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து முகுருசா வெளியேறுகிறார்!

In டெனிஸ்
Updated: 09:16 GMT, Jan 2, 2018 | Published: 09:16 GMT, Jan 2, 2018 |
0 Comments
1122
This post was written by : Elakkiya

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் ஸ்பெய்ன் வீராங்கனை கார்பின் முகுருசா விலகியுள்ளார். தசைப்பிடிப்பு காரணமாக இத்தொடரில் இருந்து விலகுவதாக முகுருசா அறிவித்துள்ளார்.

தொடரின் இரண்டாம் சுற்று போட்டியில் சேர்ப்பிய வீராங்கனை அலெக்சாண்டிரா கிருனிக்கை எதிர்கொண்ட 24 வயதான முகுருசா போட்டியின் போதே தசைப்பிடிப்பு காரணமாக கீழே விழுந்த நிலையில் மருத்துவ சேவையையுடன் அரங்கிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் மேற்படி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முகுருசா, “சிறிது நேரம் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனை இரண்டாம் சுற்றின்போதே நான் உணர்ந்தேன். கடந்த அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் போது இதுபோன்று தசைப்பிடிப்பை நான் உணர்ந்தேன். ஒருவேளை வெப்பமான நிலை அதுக்கு காரணமாக இருந்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு கணுக்கால் பிரச்சினை காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய முகுருசா 2016 ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg