Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காரைநகர் சிவன்கோயிலின் பஞ்சரத பவனி

In ஆன்மீகம்
Updated: 09:05 GMT, Jan 2, 2018 | Published: 09:05 GMT, Jan 2, 2018 |
0 Comments
1200
This post was written by : Varshini

ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காரைநகர் சிவன் கோயிலின் தீர்த்தத் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. அதே சமயம் பஞ்சரத பவனி நேற்று (திங்கட்கிழமை) பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ உமாமகேஸ்வரன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தலைமையில், குறித்த பஞ்சரத பவனி இடம்பெற்றது. திருவாம்பவை உற்சவத்தின் 9ஆவது நாளை சிறப்பிக்கும் முகமாக இத்தேர் பவனி இடம்பெற்றது.

விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று வசந்த மண்டவத்தில் தண்டிகை வாகனத்தில் வீற்றிருந்த நடராஐப்பெருமான், விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானை, அம்மன், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள் வீதி உலா இடம்பெற்றது. அதன் பின்னர் தேரேரி பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தனர்.

இத்தேர் பவனியில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு  தீச்சட்டி ஏந்தியும், அங்கப் பிரதட்சனம் செய்தும், சிதறு தேங்காய் உடைத்தும் அரோஹரா கோசத்துடன் தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg