Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டத்திற்கு தயாராகும் வவுனியா வர்த்தக சங்கம்

In இலங்கை
Published: 09:01 GMT, Jan 2, 2018 |
0 Comments
1091
This post was written by : Risha

பேரூந்து நிலைய வர்த்தகர்களுக்கு ஆதரவளித்து, போராட்டத்தில் குதிக்க தயார் என வவுனியா வர்த்தக சங்கம் அறிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தக சங்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.கிரிதரன் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”வவுனியா பேரூந்து நிலைய வர்த்தகர்கள் தொடர்பில் சரியான முடிவெடுக்காத பட்சத்தில் வர்த்தகர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்.

உள்ளூர் பேரூந்து சேவையை பழைய பேரூந்து நிலையத்திலிருந்து இயக்கும் பட்சத்தில் வர்த்தகர்கள் பாதிப்படையாது தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இது தொடர்பில் அதிகாரிகள் சரியான முடிவு எடுக்க வேண்டும். இன்றைய தினம் இதற்கு ஒரு சாதகமான பதில் கிடைக்காதவிடத்து ஏனைய வர்த்தகர்களும் பேரூந்து நிலைய வர்த்தகர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்” என்றார்.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் முதலாம் திகதி முதல் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூந்து நிலைய வர்த்தகர்கள் இரண்டாவது நாளாகவும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg