Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெல்பேர்ன் ஆடுகளம் மோசமானது: சர்வதேச கிரிக்கட் சபை

In கிாிக்கட்
Updated: 10:07 GMT, Jan 2, 2018 | Published: 10:07 GMT, Jan 2, 2018 |
0 Comments
1184
icon_com
This post was written by : Elakkiya
i (2)

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி நடைபெற்ற மெல்பேர்ன் ஆடுகளம் மிகவும் மோசமானது என சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையின் ஆடுகளம் மற்றும் வெளிக்கள கண்காணிப்பு நடைமுறைகளின் பிரகாரம் மெல்பேர்ன் ஆடுகளம் மோசமானது என சர்வதேச கிரிக்கட் சபை வரையறுத்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் அமைந்துள்ள சர்வதேச போட்டிகளுக்கான ஆடுகளம் ஒன்று மோசமானது என சர்வதேச கிரிக்கட் சபையால் வரையறுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

சர்வதேச கிரிக்கட் சபையின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் 15 நாட்களுக்குள் அவுஸ்ரேலிய கிரிக்கட் சபை பதிலளிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. அத்துடன் அவுஸ்ரேலிய கிரிக்கட் சபைக்கு முறையான எச்சரிக்கையிலிருந்து 15 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg