Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண பொலிஸ் அதிகாரிகள் சத்தியபிரமாணம்

In இலங்கை
Updated: 09:58 GMT, Jan 2, 2018 | Published: 09:58 GMT, Jan 2, 2018 |
0 Comments
1142
This post was written by : Risha

புத்தாண்டில் பணியை ஆரம்பிப்பதற்கு முன்னராக மக்களின் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்தனர்.

அந்தவகையில் கிழக்கு மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி தலைமையில் அதிகாரிகள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் நினைவுகூரப்பட்டனர். அதனை தொடர்ந்து அனைத்து உத்தியோத்தர்களும் தமது சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மட்;டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரட்ன, பொலிஸ் திணைக்கள கணக்காளர் கே.சபேசன், பொலிஸ் திணைக்கள பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.மேகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

DSC08031 DSC08047

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg