Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி செய்ய வேண்டிய முதல் பணி ஊழலை அம்பலப்படுத்துவதே: பந்துல

In இலங்கை
Updated: 09:58 GMT, Jan 2, 2018 | Published: 09:42 GMT, Jan 2, 2018 |
0 Comments
1099
This post was written by : Puvanes
bandula001

இலங்கை மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஐக்கியதேசிய கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த ஊழலுடன் தொடர்புபட்டவர்கள் என்பது மக்களுக்கு அம்பலமாகிவிட்டது எனக் குறிப்பிட்ட அவர், புதிய வருடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மங்களகரமாக ஆரம்பிக்கவேண்டிய விடயம் மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழலை அம்பலப்படுத்துவதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய ஊழல் மத்திய வங்கியில் இடம்பெற்றதே இதனால் நாட்டு மக்கள் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியினை அடைந்துள்ளார்கள் எனச் சுட்டிக்காட்டிய பந்துல, இதில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஊழல் தொடர்பான இறுதி அறிக்கை வெளியான அடுத்தகட்ட நடிவடிக்கையாக ஜனாதிபதி குறித்த ஊழலுடன் தொடர்புபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து முன்னுதாரமான செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg