Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிந்து சென்றவர்கள் தண்டனையை அனுபவிக்கும் காலம் நெருங்கிவிட்டது: ஸ்ரீநேசன்

In இலங்கை
Updated: 10:02 GMT, Jan 2, 2018 | Published: 10:02 GMT, Jan 2, 2018 |
0 Comments
1135
This post was written by : Varothayan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெலோ, புளொட் என்பன இறுதிவரைக்கும் கைகோர்த்து நிற்கின்றார்கள். குழப்பி பிரிந்து சென்றவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கும் காலம் நெருங்கிவிட்டது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஸ்ரீநேசன், கடந்த ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் எமது மக்கள் முன்னிலையில் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக வரப்போகிறார்கள். எமது தேசிய பிரச்சனைகளை இழுத்தடித்தவர்களும் வரப்போகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்டு பயப்படுபவர்கள் எமது கட்சியை அதிகம் விமர்சிக்கிறார்கள். எமது வெற்றியை எவ்வாறாவது தடுத்துவிட வேண்டும் என பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கூறுகிறார்கள். இடைக்கால அறிக்கையை நிராகரிக்கச் சொல்பவர்களின் கைகளில் என்ன இருக்கு எப்பது அவர்களுக்கே தெரியாது.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள், அதே கனவுடன் இம்முறை போட்டியிட வருவார்கள் அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg