Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினேகாவிடம் மன்னிப்பு கோரிய மோகன் ராஜா!

In சினிமா
Published: 10:00 GMT, Jan 2, 2018 |
0 Comments
1250
This post was written by : Surenth
Sneha

‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் தொடர்பாக நடிகை சினேகாவிடம் இயக்குநர் மோகன் ராஜா மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் தான் நடித்த பல காட்சிகள் வெளியாகவில்லை என நடிகை சினேகா கவலை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் வழங்கும் வகையில், மோகன் ராஜா இவ்வாறு மன்னிப்புக்கோரியுள்ளார்.

‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டமை குறித்து அனைவருக்கும் கவலை உள்ளதெனவும் சினேகா நடித்த காட்சி மாத்திரம் அல்லாது இன்னும் பல காட்சிகளும் நீக்கப்பட்டிருந்தன எனவும் அவர் கூறினார்.

இந்தத் திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்களுடன் சினேகா நடிக்க வேண்டியிருந்தது அதன் காரணமாக அவருக்கு கவலை கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம் அதற்காக அவரிடம் மன்னிப்பு கோருவதாக மோகன் ராஜா தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg