Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் சுமார் 11 ஆயிரம் வீடுகள் பூட்டு

In
Published: 10:02 GMT, Jan 2, 2018 |
0 Comments
1354
icon_com
This post was written by : Suganthini
house

பிரித்தானியாவில் கடந்த 10 வருடங்களாக சுமார் 11 ஆயிரம் வீடுகள் மூடிக் காணப்படுவதாக, லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் சுமார் 6 மாதங்களாக 2 லட்சத்து 16 ஆயிரம் வீடுகள் மூடிக் காணப்படுவதாக 276 உள்ளூராட்சிச் சபைகள் தெரிவித்துள்ளன.

தற்போது, பிரித்தானியாவில் வீடில்லாமையால் பலர் அவதிப்பட்டுவரும் நிலையில், பல வீடுகள் மூடியுள்ளன. இது பாரிய ஊழலாகுமென, அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டு வசதியின்மையால் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளதுடன், பலர் வீதிகளில் உறங்கும் நிலைமை காணப்படுவதாகவும், கடந்த டிசெம்பரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg