அடிதடியில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஷ – அம்பலமானது காணொளி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும், அவருடைய சகோதரன் யோஷித ராஜபக்ஷவும் இணைந்து றக்பி போட்டி ஒன்றின் போது மோதலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் வெலிசரவில் கடற்படை அணிக்கும், எப்.சி அணிக்கும் இடையிலான றக்பி போட்டியில் இறுதிப்போட்டி நிறைவடைந்த பின்னரே மோதல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த போட்டியில் கடற்படை அணி வெற்றி பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிரணியில் விளையாடிய யோஷித தரப்பிற்கும், கடற்படை அணிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அது கடுமையான மோதலாக மாறியபோது மோதலில் நாமல் ராஜபக்ஷவும் தலையிட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதலில் நாமல், யோஷித ஆகியோர் ஈடுபட்டுள்ள காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி விமர்மசிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை,2012ஆம் ஆண்டு நடந்த வசீம் தாஜுதீன் என்ற றக்பி வீரர் கொலைக்கும் யோஷித ராஜபக்சவிற்கும் தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் காணப்படும் போது மீண்டும் இந்த றக்பி மோதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மேலும், கடற்படை அணியில் முகாமையாளர் தம்மிக்க மெதகெதர, “நாமலும், யோஷிதவும் தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக” பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.