Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் போட்டி அணியிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் நீக்கம்

In கிாிக்கட்
Updated: 10:42 GMT, Jan 2, 2018 | Published: 10:41 GMT, Jan 2, 2018 |
0 Comments
1090
This post was written by : Elakkiya
Englands-Ben-Stokes-reacts-after-bowlin

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

சகலதுறை ஆட்ட வீரராக பென் ஸ்டோக்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் இரவு விடுதி ஒன்றில் இரசிகர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்ரேலிய அணியுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்தும் பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக டேவிட் மலான் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் மீது பொலிஸார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை பதிவு செய்கின்றனர் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg