ஆன்மீக அரசியல் என்றால் என்ன? – சூப்பர் ஸ்டார் விளக்கம்
This post was written by : Kemasiya
ஆன்மீக அரசியல் என்பது உண்மையும், நேர்மையும் மிக்க சாதி, மதப் பிரிவினையற்ற அறவழியிலான அரசியல் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தான் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் கொடி, பெயர் குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது. காலப்போக்கிலேதான் அவற்றை தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதன்போது மக்களை சந்திக்க வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அது குறித்து இனித்தான் சிந்திக்க வேண்டும். எடுத்த வேகத்தில் எதையும் கூறிவிட முடியாது, காலப்போக்கில்தான் அவற்றை கூறமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.