Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்களுக்கு ஆரோக்கிய உணவை வழங்க பிரசாரம்

In
Updated: 10:32 GMT, Jan 2, 2018 | Published: 10:32 GMT, Jan 2, 2018 |
0 Comments
1159
This post was written by : Suganthini

பிரித்தானியாவிலுள்ள சிறுவர்களின் தேக ஆரோக்கியத்தைக் கவனத்திற்கொண்டு, அந்நாட்டு பொதுச் சுகாதார நிலையம் பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது.

சுமார் 100 கலோரியைக் கொண்ட ஆரோக்கிய உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குமாறு பெற்றோருக்கு, அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள சிறுவர்களில் பலர், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதுடன், இனிப்பான குளிர்பானங்களையும் அருந்துகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நிலையம் தெரிவித்துள்ளது.

ஆரம்பப்பள்ளியைச் சேர்ந்த சிறுவர்களில் சுமார் 3 பேர்வரை, நாளொன்றுக்கு இனிப்பான உணவுகளை உட்கொள்வதாகவும், அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, சிறுவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையை பிரித்தானியாவின் சுகாதார நிலையம் முன்னெடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg