Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குபவர்களுக்கு இத்தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்: ரிஷாட்

In இலங்கை
Updated: 11:02 GMT, Jan 2, 2018 | Published: 10:52 GMT, Jan 2, 2018 |
0 Comments
1040
icon_com
This post was written by : Risha
8

சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இத் தேர்தலின் மூலம் முடிவு கட்ட அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) அம்பாறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு, கிழக்கு இணைப்பா? அல்லது பிரிவா? பாராளுமன்றத் தேர்தல் முறையில் முஸ்லிம் சமூகத்துக்கும், மலையகத்தவர்களுக்கும் இழைக்கப்படவிருக்கும் அநீதிகளைத் தொடர இடமளிப்பதா? இல்லையா? ஆகிய கேள்விகளுக்கெல்லாம் இந்தத் தேர்தல் பாடம் புகட்டப் போகின்றது.

தேர்தல் காலங்களில் தலைகளை எண்ணி, இத்தனை வாக்குப் பலம் எங்கள் கட்சிக்கு இருக்கிறது என்ற மாயையை ஏற்படுத்தி, எவ்வளவு தொகை எங்களுக்கு தரமுடியும்? என்ற கேவலமான அரசியலை நடாத்திக்கொண்டிருப்பவர்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது எழுந்துள்ளது.

எமக்கு முன்னே வந்திருக்கும் ஆபத்துக்களை எதிர்நோக்குவதற்கு இந்தத் தேர்தல் நமக்கு பலம் சேர்க்க வேண்டும். நமது சமுதாயம் இந்த சந்தர்ப்பத்தில் சரியான முடிவை எடுக்கவில்லையென்றால், எமது சந்ததியினரின் எதிர்காலமும் சூனியமயமாகி விடும். அரசியலமைப்பு மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கவுள்ள பாரிய ஆபத்துக்களை தடுப்பதற்கு, இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குப் பலமே அடித்தளமாய் அமையப் போகின்றது.

வடக்கு, கிழக்கு இணைப்பா? அல்லது பிரிவா? பாராளுமன்றத் தேர்தல் முறையில் முஸ்லிம் சமூகத்துக்கும், மலையகத்தவர்களுக்கும் இழைக்கப்படவிருக்கும் அநீதிகளைத் தொடர இடமளிப்பதா? இல்லையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்தத் தேர்தல் பாடம் புகட்டப் போகின்றது.

பேரம் பேசும் சக்தியாகவும், ஆட்சியை மாற்றும் சக்தியாகவும், அதனைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கிய நமது சமூகம், அதனை தற்போது இழந்து தவிக்கின்றது. இந்நிலையில், முழு முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டம், கிழக்கு மாகாண மக்களின் முழுமையான ஒற்றுமையிலும், ஐக்கியத்திலுமே பெரிதும் தங்கியுள்ளது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg