Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் கைகோர்க்க வேண்டும்: எல்.இளங்கோவன்

In இலங்கை
Updated: 11:01 GMT, Jan 2, 2018 | Published: 11:01 GMT, Jan 2, 2018 |
0 Comments
1147
This post was written by : Varothayan

அரசாங்க அலுவலகங்களில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூன்று மொழிகளிலும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக செயற்படுவோம் என்ற சத்திய கூற்றினை ஊழியர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

தேசிய கொடியினை ஆளுநரின் செயலர் இளங்கோவன் ஏற்றி வைக்க மாகாண சபைக் கொடியினை ஆளுநரின் உதவிச் செயலர் ஏ.எக்ஸ்.செல்வநாயகம் ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டதை அடுத்து சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது.

இங்கு உரையாற்றிய ஆளுநரின் செயலர், மேன்மை தங்கிய ஜனாதிபதி மைதிபால சிறிசேன அவர்களின் இந்த ஆண்டிற்கான தேசிய உணவு உற்பத்தி கொள்கையினை செயற்படுத்துவதற்காக வடமாகாணத்தின் நிர்வாக செயற்பாடுகளை செயற்படுத்தும் ஆளுநர் செயலகம், ஊழியர்கள் அனைவரும் ஆளுநர் அவர்களுடன் இணைந்து செயற்றிட்டத்திற்காக முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அரசாங்க அலுவலகங்களில் புதுவருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று யாழ். நீதிமன்றிலும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

jaffna office (1) jaffna office (2) jaffna office (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg