Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2017ஆம் ஆண்டு யுத்தம், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளது – பரிசுத்த பாப்பரசர்

In
Published: 10:58 GMT, Jan 2, 2018 |
0 Comments
1056
This post was written by : Suganthini
pop

2017ஆம் ஆண்டு யுத்தம் மற்றும் பொய்கள், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக, பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானிலுள்ள சென். பீற்றர் தேவாலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, ‘கடந்த 2017ஆம் ஆண்டு யுத்தம் மற்றும் பொய்கள், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானம் வீணடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தமென்பது பாராபட்சமற்ற, அபத்தமான பெருமையின் வெளிப்படையான அடையாளமாகும். பலரின் அத்துமீறல் மனிதர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை சீரழித்துள்ளது. நாம் அனைவரும் நாம் செய்த செயல்களுக்கு கடவுள் முன்பாக பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg