Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களின் பணத்தில் ஊதியம் பெறுவதை மறக்க கூடாது: வவுணதீவு பிரதேச செயலாளர்

In இலங்கை
Updated: 11:04 GMT, Jan 2, 2018 | Published: 11:04 GMT, Jan 2, 2018 |
0 Comments
1112
This post was written by : Risha
s.suthakar ds

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமே நாம் ஊதியத்தை பெறுகின்றோம் என்பதை மறக்காது பணியாற்ற வேண்டும் என வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற அரச சேவை உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை நாம் நடுநிலையாக பாகுபாடின்றி செய்யவேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நாம் திருப்தியாக செய்ய முடியாமல் போன அலுவலக காரியங்களையும், மக்களுக்கான சேவையினையும் பிறந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டில் சரிவர திருப்தியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.

மக்களுக்கான சேவையை திறம்பட செய்யவேண்டும், என்பதற்காகவே மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை வழங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg