Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரண விசாரணை: சசிகலாவிற்கு பதிலாக ராஜா!

In இந்தியா
Updated: 12:41 GMT, Jan 2, 2018 | Published: 11:42 GMT, Jan 2, 2018 |
0 Comments
1177
This post was written by : Kemasiya

ஜெயலலிதா மரணம் தொடர்பில் விளக்கமளிக்க சசிகலா ஆஜராக மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியனே ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) இளவரசியின் மகள் கிருஸ்ணப்பிரியா விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்திருந்த நிலையில், அடுத்து சசிகலாவிற்கு பதிலாக சட்டத்தரணியே ஆஜராவார் என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.

இவர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆஜராகி விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இடம்பெற்றுவரும் நிலையில், இத் தகவல் வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg