Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் கனேடிய விமானியும் குடும்பத்தினரும் உயிரிழப்பு

In கனடா
Updated: 11:33 GMT, Jan 2, 2018 | Published: 11:31 GMT, Jan 2, 2018 |
0 Comments
1048
This post was written by : Elakkiya
garen

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற கடல்விமான விபத்து ஒன்றில் கனேடிய விமானியும் முக்கிய தொழிலதிபருமான கரேன் மோர்கனும் அவருடைய குடும்பத்தினரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக சிட்னி சுற்றுலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிட்னி சுற்றுலா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி, கனடாவில் வாழும் மோர்கனின் பெற்றோருக்கு அவருடைய உயிரிழப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் கரேன் மோர்கனுடன் அவருடைய மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்மார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான குறித்த ஒற்றை இயந்திர கடல் விமானம் ஹக்ஸ்பெரி ஆற்றில் வீழ்ந்து வேகமாக மூழ்கியதாக விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg